கோத்ரா: குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் எரிப்பு சமவத்தில் முக்கிய குற்றவாளியான பாரூக் முகமது என்பவன் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் அரசு காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலைமைச்சராக இருந்த சமயம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் எஸ்-6 பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது. இதில் அந்தபெட்டியில் பயணம் செய்த 59 கரசேவகர்கள் எரித்து கொல்லப்பட்டனர். இதனையெடுத்து குஜராத் மாநிலத்தில் மிகப்பெரும் மதக்கலவரம் ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னால் எம்.பியான் இஹ்சான் ஜாபரி உட்பட 1000ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும் இச்சமவத்திற்கு முழு காரணமாக இருந்த குற்றவாளி இதுவரை சிக்காமலேயெ இருந்தான். இந்நிலையில் குஜராத் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாரூக் முகமது என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். கோத்ரா சம்பவத்தை நிகழ்த்தி விட்டு மும்பைக்கு தப்பிச்சென்றதாகவும் அங்கு நிலபுரோக்கர் தொழில் செய்து வந்ததாகவும், கோத்ராவிற்கு வர முயற்ச்சிக்கும்போது பஞ்சமால் மாவட்டத்திலுள்ல கலோர் என்னும் ஊரில் வைத்து பிடிபட்டதாகவும் மேலும் கைது செய்யப்பட்ட பாரூக்கிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Write comments