ஜித்தா: சவுதி அரேபியாவிலுள்ள புனித ஸ்தலமான மக்கா அருகே தீவிரவாதிகள் சிதித்திட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலில்ன் அடிப்படையில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான "அரேப் நியுஸ்" தளத்தில் வந்திருக்கும் செய்தியாவது, ஜித்தா மற்றும் மக்கா ஆகிய இரு இடங்களில் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்த போது இவ்விரு இடங்களிலும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் உடனே அதை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக அறிவித்திருக்கிறது.
மக்கா நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வாதினோமான் என்னும் இடத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு மத்தியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் அங்கே பதுங்கியிருந்து 4 தீவிரவாதிகளில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் மீதி இருவர் வெடிகுண்டு வெடிக்கச்செய்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த தாக்குதலில் வேறு யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனது டுவிட்டரில் மக்கா ஆளுனர் இதனை தெரிவித்து விபரமான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறார். மேலும் கிடைத்த தகவல்களில்ன் அடிப்படையில் ஜித்தா நகரிலும் இரண்டு தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு அல் அஸிர் என்னுமிடத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கே உள்ள பள்ளியில் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கானது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான "அரேப் நியுஸ்" தளத்தில் வந்திருக்கும் செய்தியாவது, ஜித்தா மற்றும் மக்கா ஆகிய இரு இடங்களில் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்த போது இவ்விரு இடங்களிலும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் உடனே அதை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக அறிவித்திருக்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு அல் அஸிர் என்னுமிடத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கே உள்ள பள்ளியில் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கானது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments