மண்ணுக்கடியில் கூட ஊழல் செய்யமுடியும் என்பதை இந்தியாவுக்கு காண்பித்ததே தமிழகம் தான் என பாரதீய ஜனதாவின் தேசிய தலைவர் அமித்ஷா கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமாரி மாட்டத்திற்கு உட்பட்ட ஆறு தொகுதிகளின் வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக நாகர்கோவில் வந்திருந்த அமித்ஷா அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவ்வாறு பேசினார். தமிழகத்தில் கடந்த 50 வருடங்களாக இரு திராவிடகட்சிகளே ஆட்சி செய்து வந்திருக்கிறது. ஊழலை அகற்ற திமுகவையும் அதிமுகவையும் மாறி மாறி மக்கள் தேர்வு செய்துகொண்டிருக்கிறார்கள். இதனை மாற்ற ஒரே வழி தமிழகத்தில் பாரதீய ஜனதா அரசு அமைவதே. மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் ஆட்சியில் 12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது.
ஆகாயத்திலும் பூமிக்கு அடியிலும் கூட ஊழல் செய்யலாம் என இந்தியாவுக்கு கற்றுத்தந்ததே இந்த இரு கட்சிகள் தான். எனவே இவர்களால் ஒருபோதும் ஊழலற்ற ஆட்சியை அமைக்க முடியாது. ஏழைகளுக்காகவும், விவசாயிகளுக்காகவும் மோடி அரசு கொண்டு வந்த திட்டங்களை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு செயல்படுத்தாமல் புறக்கணிக்கிறது. மக்களுக்கு பயனளிக்கக்கூடிய எத்துனையோ நல்ல செயல் திட்டங்களை கொண்டு வராமல் மது உற்பத்தியிலும் அதனை விற்பனை செய்வதில் மட்டுமே ஜெயலலிதா அரசு முனைப்பு காட்டியது. எனவே இந்த நிலை மாற தமிழக மக்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
பாரதீய ஜனதாவின் தேசிய தலைவர் வந்தும் கூட்டம் வரவில்லை என்பதனை கண்ட அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கவலை தோய்ந்த முகமாகவே காணப்பட்டார். பொதுவாகவே தமிழகதில் பெருவாரியான இடங்களில் பா.ஜ.க நடத்தும் கூட்டங்களுக்கு மக்கள் கூடுவது என்பது மிகக்குறைவே. ஆனால் தங்களது கட்சி மிகப்பெரும் பலத்தோடு இருக்ககூடிய குமரி மாவட்டத்திலும் இத்தகைய நிலையை கண்டு பாரதீய ஜனதா நிர்வாகிகள் கலங்கிபோயுள்ளனர். நாளை பிரதமர் மோடியும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தமிழகம் வருவதால் மக்களை கூட்டுவதற்காக வழிகளை பா.ஜ.கவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கன்னியாகுமாரி மாட்டத்திற்கு உட்பட்ட ஆறு தொகுதிகளின் வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக நாகர்கோவில் வந்திருந்த அமித்ஷா அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவ்வாறு பேசினார். தமிழகத்தில் கடந்த 50 வருடங்களாக இரு திராவிடகட்சிகளே ஆட்சி செய்து வந்திருக்கிறது. ஊழலை அகற்ற திமுகவையும் அதிமுகவையும் மாறி மாறி மக்கள் தேர்வு செய்துகொண்டிருக்கிறார்கள். இதனை மாற்ற ஒரே வழி தமிழகத்தில் பாரதீய ஜனதா அரசு அமைவதே. மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் ஆட்சியில் 12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது.
பாரதீய ஜனதாவின் தேசிய தலைவர் வந்தும் கூட்டம் வரவில்லை என்பதனை கண்ட அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கவலை தோய்ந்த முகமாகவே காணப்பட்டார். பொதுவாகவே தமிழகதில் பெருவாரியான இடங்களில் பா.ஜ.க நடத்தும் கூட்டங்களுக்கு மக்கள் கூடுவது என்பது மிகக்குறைவே. ஆனால் தங்களது கட்சி மிகப்பெரும் பலத்தோடு இருக்ககூடிய குமரி மாவட்டத்திலும் இத்தகைய நிலையை கண்டு பாரதீய ஜனதா நிர்வாகிகள் கலங்கிபோயுள்ளனர். நாளை பிரதமர் மோடியும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தமிழகம் வருவதால் மக்களை கூட்டுவதற்காக வழிகளை பா.ஜ.கவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments