Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 17, 2016

ராதாரவியுடன் இணைந்த விஷால்


இயக்குனர் முத்தையா இயக்கத்தில் அன்புச்செழியன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் புதிய படம் "மருது". இதில் விஷா கதாநயகனாக நடிகிறார். இதில் ஸ்ரீதிவ்யா, ராதாரவி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். நடிகர் ராதாரவியுடன் இணைந்து இப்படத்தி நடிக்கும் விஷால் அவரோடு நடித்த அனுபவத்தை பற்றிக்கூறினார்.

தென்இந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. எந்த முறையும் இல்லாத அளவிற்கு இரு பிரிவுகளாக பிரிந்து நின்று அரசியல்வாதிகளை மிஞ்சு அளவிற்கு ஒவ்வொரு அணியினரும் மற்றை அணியினரை கடுமையாக சாடி குற்றஞ்சுமத்தினர். இதநாள் வரை நடிகரி சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த ராதாரவியும் விஷாலும் எதிர் எதிர் அணியில் இருந்ததால் இரண்டுபேருக்கும் மத்தியில் பெரும் கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் மருது படம் தொடர்பாக இயக்குனர் முத்தையா தன்னிடம் கதை சொன்ன போது அதனை ஏற்றுக்கொண்டதாகவும், பின்னர் கதையின் ஒரு பாத்திரத்திற்கு நடிகர் ராதரவி பொருத்தமானவராக இருப்பார் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் உங்களுக்கு எப்படி என இயக்குனர் கேட்டபோது, தனக்கும் ராதரவிக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை, நடிகர் சங்கம் வேறு, நடிப்பு என்பது வேறு, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட எண்ணங்கள் சிந்தனைகள் இருக்கும், அதன் அடிப்படையிலேயே இரண்டு பேரும் எதிரெதிர் துருவங்களில் நின்றதாகவும் குறிப்பிட்டார். நடிகர் சங்க தேர்தலில் எதிர்த்து நின்றதால் அவர் முகத்திலேயே விழிக்க மாட்டேன் என்று சொல்வதெல்லாம் தவறு, அவரோடு தான் ஒரு படத்திலும் நடித்தது இல்லை, அவரோடு இணைந்து நடிப்பதற்கும் தான் ஆவலாக உள்ளதாக இயக்குனரிடம் கூறியதாக கூறும் விஷால், அவரோடு நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். இப்போது தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்கிறேன் வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நடிகர் சங்கத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் தன்னிடம் கூறுமாறு ராதாரவி கூறியதாக விஷால் கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic