அதே போன்று இன்றைய தினமே மற்றொரு இடத்தில் மக்கள் அமைப்பு ஒன்றின் தலைவர் ஒருவருக்கு பாதுகாப்பிற்காக பணியாற்றி வந்த சாதிக் என்ற போலிஸாரும் நண்பகல் 12 மணியளவில் திவிரவாதிகளால் சுடப்பட்டார். காயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் அவரும் இறந்துபோனார். இவ்விரு சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
கஷ்மீரில் பாரதிய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியும் இணைந்து ஆட்சியை பிடித்தது. அதன் பிறகு நடைபெற்ற முதல் தீவிரவாத தாக்குதல்கள் இதுவேயாகும். இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னால் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "கஷ்மீரின் வளர்ச்சிக்கு இடையூறு செய்யும் வகையில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். பலியான காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments