சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்துள்ளது. ஆனால் அந்த 60 ஆண்டுகளி அவர்கள் செய்திறாத சாதனையை நரேந்திர மோடியின் அரசு 2 ஆண்டுகளில் செய்துள்ளது என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருது இராணி தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி வென்ற அமித்தி தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்து ஸ்மிருது இராணி இவ்வாறு தெரிவித்தார். நேரு-காந்தி குடும்பம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நீங்கள் அனைவரும் 2017ல் வரவிருக்கின்ற சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். அந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோற்பது உறுதி காரணம் காங்கிரஸ் கட்சிகாரர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஒரு குடும்ப அரசியல் கண்டிப்பாக மக்களுக்கு பயன் படாது என்று கூறினார்.
வரக்கூடிய உ.பி சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நீங்கள் அறிவிக்கப்படுவீர்களா? என்று கேட்டதற்கு தான் கட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவள் என்றும், கட்சி என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவேன் என்று கூறினார். நான் சாதாரணமாக "ஸ்மிருதி இராணி"யாகவே அங்கு செல்கிறேன், ஆனால் மக்கள் என்னை அன்போடு "அக்கா" என்று அழைக்கிறார்கள். நிச்சயம் இந்த தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன். மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதே பா.ஜ.கவின் முக்கிய பணி என்றும் தெரிவித்தார்.
பாரத் மாதா கீ ஜெய் விவகாரம் தொடர்பாக கேட்டதற்கு, அதை உச்சரிப்பது என்பது ஒவ்வொரு இந்தியருக்கான உரிமை ஆனால் அதை யாரிடமும் தினிக்கக்கூடாது என்றார்.

No comments:
Write comments