Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 8, 2016

70,000 நீதிபதிகள் இருந்தால்தான் வழக்குகளை முடிக்க முடியும் - தாகூர்

குறைந்தபட்சம் 70,000 நீதிபதிகள் இருந்தால் மட்டுமே உடனடியாக பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை முடிக்க முடியும் என மூத்த நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ஒரிஸா மாநில உயர் நீதிமன்றத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தாக்கூர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது, இந்தியாவில் நீதிபதிகளின் நியமனத்தில் குறைபாடு உள்ளது. நீதிபதிகளை நியமிப்பதில் காலதாமதம் அதிகமாக ஆகிறது. ஒவ்வொரு மாநில அரசாங்கங்களும் உரிய நடவடிக்கை எடுத்து வெற்றிடங்களாக இருக்கும் பணியிடங்களில் உடனடியாக நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும். இதன் மூலம் உரிய நேரத்தில் காலதாமதிமின்றி நிலுவையில் இருக்கின்றன் வழக்குகளுக்கு உடனடியாக நீதியை வழங்கமுடியும். நீதிபதிகளி நியமனம் விஷயத்தில் தாமதம் ஏற்படுத்தப்படுவதை காணும் போது மிகவும் வருத்தமாக உள்ளது என்று தாக்கூர் கூறினார்.

நீதி என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமையாகும். எந்த ஒரு அரசாங்கமும் ஒரு குடிமகனுக்கு கிடைக்கவேண்டிய நீதியை தாமதப்படுத்துவதற்கு அதிகாரம் கிடையாது என்றும் கூறினார். கிட்டத்தட்ட 3 கோடிக்கு மேல் வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், 30 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். ஒதுக்கப்பட்ட 900 உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணி இடங்களுக்கு வெறும் 450 நீதிபதிகள் மட்டுமே பணி அமர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் 1987 ஆண்டிலேயே இந்திய நாட்டிற்கு குறைந்தபட்சம் 44 ஆயிரம் நீதிபதிகள் தேவைப்படும் என அரசு சட்ட கமிஷன் பரிந்துரை செய்ததாக தெரிவித்தார்.

சமீபத்தில் புதுடெல்லியில் பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த நீதிபதி தாக்கூர் இதே கருத்தை தெரிவித்து உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic