Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 18, 2016

ரகுராம் ராஜன் விவகாரத்தில் அருண்ஜேட்லி - சு.சாமி மறைமுக மோதலா...?



பா.ஜ.வின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி மத்திய ரிசர்வ் வங்கி(ஆர்.பி.ஐ)யின் மேலாளர் ரகுராம் ராஜனை உடனடியாக அப்பதவயிலிருந்து நீக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.  சு.சாமி ரகுராம் ராஜனை பணியைவிட்டு நீக்கசொல்வது என்பது ஏமாற்று காரியம், அவர் மறைமுகமாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை தாக்கியே பேசுகிறார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

சு.சாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் "ஆர்.பி.ஐ இயக்குனர் ரகுராம் ராஜன் மனதளவில் இந்தியராக இல்லை,  இந்திய பொருளாதாரம் மேம்படுவதற்கு உழைக்காமல், அதனை நாசப்படுத்தும் வேலைகளையே செய்து வருகிறார். அவர் வேன்டுமென்றே இத்தைகைய செயல்களில் ஈடுபடுகிறார். உடனடியாக அவரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும். அமெரிக்க குடியுரிமை பெற்று (கீர்ன் கார்டு) மூலமாகவே அவர் இந்தியாவில் இருக்கிறார். அந்த குடியுரிமையை புதுப்பிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்கு கட்டாய பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் எப்படி இந்தியாவுக்கு விசுவாசியாக இருக்க முடியும்? இவரின் இத்தகைய பொறுப்பற்ற செயல்பாடுகளினால் இந்திய பொருளாதாரம் சரிந்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ள்து. இதற்கு ரகுராம் ராஜனே முக்கிய காரணம். என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு யு.பி.ஏ அரசாங்கத்தால் 3 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு ரகுராம் ராஜன் அப்பொருப்பில் அமர்த்தப்பட்டார். தேவைப்பட்டால் அவரோடு போடப்பட்ட ஒப்பந்தத்தை நீட்டிக்கொள்ளலாம் என்றவகையில் ரகுராம் ராஜன் பொறுப்பு வகிக்கத்தொடங்கினார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி "யாருடைய தனிப்பட்ட தூண்டுதலின்படி இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது, இது பொத்தளத்தில் நின்று கொண்டு விசாரிக்க வேண்டிய விசயம அல்ல, அரசு நாட்டுக்கு எது நல்லதோ அந்த முடிவை ஆராய்ந்து எடுக்கும் அதில் எவருடைய தனிப்பட்ட தூண்டுதலும் இருக்காது" என சு.சாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic