Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 18, 2016

ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக ஆர்வம் காட்டும் இளைஞர்கள் பகீர் தகவல்



தீவிரவாத செயல்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் தற்போது லஷ்கர்-இ-தாய்பா, ஜெய்ஷே-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளை விட்டுவிட்டு, ஈராக்-சிரியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேவதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக மூத்த அதிகாரி ஒருவரு தெரிவித்திருக்கிறார்.

ஈராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்கப்படைகளுக்கு எதிராக மிகப்பெரும் தீவிரவாத தாக்குதலை ஐ.எஸ் அமைப்பினர் நடத்தி வருகின்றனர். பிரான்சு, பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் அவ்வப்போது தாக்குதலை நடத்தி வரும் இவ்வமைப்பில் சேர அதிக இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்பைக்காட்டிலும் ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்கு ஆர்வம் காட்ட முக்கிய காரணமாக கருதப்படுவது "கலீபா ஆட்சி" தத்துவமாகும். ஐ.எஸ் அமைப்பினர் 7ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்து வந்த கலீபா ஆட்சி முறையை கொண்டு வருவோம் என்றும் தங்களுக்கென கலீபாவை தேர்ந்தெடுத்து செயல்படுவதாலும் அவ்வைபில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது இந்தியாவிலும் சில இளைஞர்கள் இவர்களின் மூலைச்சலவைக்கு ஆளாகி அவ்வமைப்பில் சேர்ந்து தீவிரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டுவருகின்றனர். இவர்களில் சிலர் கடந்த நாட்களில் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரிக்கும்போது அதற்கு முன் ஜெய்ஷே-இ-முகமது மற்றும் சிமி போன்ற தீவிரவாத அமைப்புகளில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் தங்களது கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐ.எஸ் அமைப்பு முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்திற்கும் எதிரானது என்றும், அது உலகத்துக்கே அபாயமானது என்றும் பல இஸ்லாமிய அமைப்புகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதே போன்று பங்களாதேஷிலும் செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜமாத்து முஜாஹிதீன் பங்களாதேஷ் தீவிரவாதிகள் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற் மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருப்பதாகவும், இதனால் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic