மத்தியில் பா.ஜ.க ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு துவங்குவதை ஒட்டி பிரம்மாண்ட நிகழ்சிகளை தலை நகர் டெல்லியில் நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. மோடி அரசு செய்த மக்கள் நலத்திட்டங்களை பிரபலப்படுத்தும் விதமாக "முன்னேற்ற படிகள்" என்னும் தலைப்பில் பிரம்மாண்ட நிகழ்சிகள், கலை நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக பா.ஜ.அ அறிவித்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சி கூறும்போது, பா.ஜ.க கடந்த இரண்டு ஆண்டுகளில் தோல்வியை தழுவியுள்ளது. இதுவரை 350ற்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசியுள்ள நரேந்திர மோடி வெறும் பேச்சுள்ள பிரதமராகவே இருந்துள்ளார். ஊழல் குறித்து வாய்கிழிய பேசிய மோடி தனது கட்சிகாரர்களே ஊழல் செய்து இருப்பதை கண்டும் காணாமல் இருக்கிறார். இந்த இரண்டு ஆண்டுகளில் மத துவேஷ பிரச்சாரங்களை அவரது கட்சியினரே செய்து வருகின்றனர். ஆனால் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கருப்புப் பணம் கதை கருப்பாகவே இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று வாக்குறுதிகளாகிப்போனது. முதல்வர் மோடியின் பேச்சுக்கும் பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கும் துளியும் கூட சம்பந்தமில்லை. இந்த ரீதியில் சாதனை செய்துள்ளதாக பீற்றிக்கொள்கிறார்கள். இதனை எதிர்த்து நாடு முழுவது காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் செய்யப்படும் அதற்காக ஆவண வீடியோ ஒன்று தயாராகி வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

No comments:
Write comments