மதுவிலக்கை உடனே அமல்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று எனவே கொஞ்சமா குடிங்க எனக்கூறியுள்ளோ உத்திரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.
பீஹாரில் நிதிஷ்குமார் முதல்வராக இருந்து வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் கடந்த ஏப்ரல் மாதம் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. இதனை அடுத்து அம்மாநிலத்தில் மதுவிற்பதற்கும், குடிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள குடிமகன்கள் அண்ணை மாநிலமான உத்திரபிரதேசத்திற்கு படையெடுத்து வருகின்றனர். பீஹாரைப்போலவே உத்திரபிரதேசத்தில் மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறும்போது "எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற ரீதியில் மதுவிலக்கை உடனே அமுல்படுத்த முடியாது, இது விவசாயி மற்றும் மதுக்கடைகளில் வேலை செய்யும் லட்சக்கணக்கானவர்களின் வேலை வாய்ப்பு தொடர்பான விஷயம். எனவே தற்போது அதனை அமுல்படுத்துவது சாத்தியம் இல்லை வேண்டுமானால் குறைவாக குடித்துக்கொள்ளுங்கள் என்று மட்டுமே இவ்வாறு கூற முடியும். மதுவிலக்கை அமுல்படுத்துவதால் வருவாய் இழப்பு அதிகம் ஏற்படும்" என்று கூறினார்.
பீஹாரில் மதுவிலக்கு தடைசெய்யப்பட்டதை அடுத்து உத்திரபிரதேசத்திலும் அண்டை நாடான நேப்பாளத்திலும் மது விற்பனை அதிகரித்துள்ளது. நாடு கடந்து குடிமகன்கள் செல்லத்துவங்கிவிட்டனர். இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது நிதிஷ்குமார் அரசுக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

No comments:
Write comments