Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 7, 2016

கேரள தலித் பெண் பலாத்காரம் செய்து படுகொலை - தீவிரமடைகிறது போராட்டம்


 கேரள‌ தலித் பெண் பலாத்காரம் செய்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் தலித் மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாநிலங்களவை எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி தலித் மாணவி ஒருவர் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டார். மாநிலங்களவை பூஜ்ஜிய நேரத்தில் இப்பிரச்சினையை மார்க்சிஸ்ட் எம்.பி. சி.பி. நாரயணன் எழுப்பினார். அவர் பேசும்போது, "எர்ணாகுளம் சம்பவம் போன்றே, காசர்கோட்டில் கடந்த வாரம் நடந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று நடந்துள்ளது. இது நமக்கு கரும்புள்ளி. குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறை போதுமான ஆர்வம் காட்டவில்லை” என்றார்".


அவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் பேசும் போது, “இது மிகவும் கொடூரமான குற்றம். ஒவ்வொரு வரும் வெட்கப்பட வேண்டிய விஷயம்” என்றார்.


மற்றொரு சம்பவம்:

கேரளாவில் மற்றொரு தலித் மாணவி நேற்று முன்தினம் மூன்று பேரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள வர்கலா பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. நர்ஸிங் மாணவி, ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது இரு நண்பர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூட்டு பலாத்காரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


இச்சம்பவம் குறித்து ஆன்லைன் ஊடகம் சார்பில் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் கேட்கப்பட்டபோது "சவூதி அரேபியா போன்று இந்தியாவிலும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனை கொடுக்கப்படாதவரை நம் நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விகுறிதான்" என்று ஒருமித்தமாக கருத்தை பதிவு செய்தார்கள். தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.


செய்தி : சாஹிப்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic