Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 8, 2016

தமிழர்களுக்கு எதிராக தொடரும் சித்திரவதை

இலங்கையில் உள் நாட்டுப்போர் முடிந்து நாட்கள் பல ஆகியும், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகுகூட அங்கே தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக ஐ. நா சபையின் அதிகாரி வேதனை தெரிவித்துள்ளார்.

அன்டை நாடான இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே பல ஆண்டுகாலமாக நடந்துவந்த உள் நாட்டுபோர் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போர் முடிந்த பின்னர் கூட அங்கே தமிழர்களின் வாழ்வில் எந்த நிலையிலும் மாற்றம் ஏற்படவில்லை. அவர்கள் இன்றும் அகதி முகாம்களிலும் முள்வேலிகளுக்கு மத்தியிலும் தங்களது வாழ் நாளை கழித்துக்கொண்டிருக்கின்றனர். எந்தவொரு விசாரணையும் இன்றி இன்னமும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஐ. நா சபையின் முக்கிய  நபரான ஜூவான் மெண்டஸ் மற்றும் மோனிகா பின்டோ ஆகிய இருவரும் எட்டு நாட்கள் பயணமாக இலங்கை சென்று அங்கே நடைபெறக்கூடிய மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை இலங்கை அரசிடம் வழங்குவார்கள். அதற்கு இலங்கை அரசு தனது தரப்பிலிருந்து பதிலை அளித்தவுடன் அதனை பெற்றுக்கொண்டு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ. நா சபையின் மனித உரிமை கவுன்சிலின் கூட்டத்தில் சமர்பிப்பார்கள் என தெரிகிறது.

இலங்கை தலைநகரமான கொழும்புவில் தமிழர்களின் தற்போதைய நிலைமை குறித்து ஜுவான் மெண்டஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது "உள் நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பின்னரும் தமிழர்கள் மீதான சித்ரவதை கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனாலும் கூட சட்டத்திலுள்ள ஓட்டைகளை காரணமாக இன்னமும் சித்திரவதை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மனித உரிமைகளை தூக்கி பிடிப்பதில் இலங்கை அரசு எடுத்த சாதகமான நடவடிக்கைகள் எங்களுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. இலங்கையில் உள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைகள்ல் நிலமை துயரம் அளிப்பதாகவே உள்ளது. வரலாற்றில் இலங்கை ஒரு முக்கிய தருணத்தில் உள்ளது. சர்வதேச மனித உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் எல்லாம் முழுமையாக சீரமைக்கப்படும் வகையில், வரும்காலங்களில் தமிழர்களுக்கான நல் வழையை ஏற்படுத்துவதில் எங்களது ஒத்துழைப்பு தொடரும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic