கஷ்மீரில் பாகிஸ்தான் நாட்டு ஜெய்ஷே இ முகமது தீவிரவாத அமைபின் கமான்டோ சாபீர் கானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவனிடமிருந்து இந்திய நாட்டு ஆதார் அடையாள அட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாரமுல்லா என்னும் பகுதியில் ஜம்மு கஷ்மீர் மற்றும் துணை இராணுவத்தினர் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீர் பகுதியைச்சேர்ந்த தீவிரவாதி சாபீர் கானை போலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக கஷ்மீர் காவல்துறை அதிகாரி இம்தியாஸ் கூறும்ப்போது "இது மிகப்பெரிய சாதனையாகும். கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஜெய்ஷே இ முகமது அமைப்பின் முக்கிய தலைவன் ஆவான். தீவிரவாத தற்கொலை படை தளத்தை அவன் உருவாக்க திட்டமிட்டிருந்தான் என்றும் பாதுகாப்பு படையினர் மற்றும் முக்கிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானில் பயிற்சி பெற்றுள்ளான்" என்று கூறினார்.
தீவிரவாதியை பரிசோதித்ததில் அவனிடமிருந்து ஆதார் அடையாள அட்டை இருந்ததை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சியுற்றனர். கடந்த ஜனவரி மாதம் அவன் இந்தியாவிற்குள் ஊடுறிவியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவனிடமிருந்த ஆதார் அடையாள அட்டையை பறிமுதல் செய்த போலிஸார் அது போலியானதுதானா? என்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Write comments