ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய பெங்களூர் அணி கோலி மற்று டவில்லிர்ஸ் ஆகியோரின் சதத்தால் 144 ரன்களில் வெற்றி பெற்றது பெங்களூர் அணி
இப்போட்டியில் குஜராத் அணியில் ரெயினாவிற்கு பதிலாக மெக்கல்லம் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலி பந்து வீசுவதாக அறிவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கெயிலும் கோலியும் ஆடினர். இந்த போட்டியிலும் கெயில் சொற்ப ரன்னிலேயே ஆட்டமிழக்க, கோலியுடன் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். துவக்கம் முதலே டிவில்லியர்ஸ் ரன்களை குவித்தார். 25 பந்துகளில் அரைசதம் கண்ட அவர் தொடர்ந்து சிக்ஸர் பவுண்டிரிகளாக விளாசினார். மறுபக்கம் 39 பந்துகளில் அரைசதம் கொண்ட கோலியும் தனது பங்கிற்கு விலாசத்துவங்கினார். 43 பந்துகளில் டிவில்லியர்ஸும், 53 பந்துகளில் கோலியும் சதம் அடித்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி 248 என்ற இமாலய ஸ்கோரை குவித்தது.கோலி 109 ரன்களில் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் 129 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடுமையான இலக்கை நோக்கி பேட் செய்ய துவங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஸ்மித் 7 ரன்களிலும், மெக்கல்லம் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த ஜடஜே 21 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற அனித்து வீரர்களும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்ப, குஜராத் அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இப்போட்டியின் டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments:
Write comments