Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 15, 2016

பிடிப்பட்டது எங்களது பணம்- எஸ்.பி.ஐ

ஆந்திர மாநிலத்தில் செயல்படும் எங்களது வங்கி கிளைகளில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டதால் கோவை மாவட்டத்திலுள்ள எங்களது வங்கி கரூவூலத்திலிருந்து விசாகப்பட்டினத்திற்கு 3 கண்டைனர்களில் நாங்கள்தான் பணம் அனுப்பிவைத்தோம். இதனை மத்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலோடே நாங்கள் இதை மேற்கொண்டோம்.


பணம் கொன்டு செல்லப்பட்ட லாரிகளை தேர்தல் கண்காணிப்பு படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். அவர்களது செயல் தவறானதாகும். இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று நம்புகிறோம்" இவ்வாறு எஸ்.பி.ஐ வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

பணம் எடுத்துச்செல்வோர் அனைவரையும் பிடிக்க வேண்டும், அவர்கள் கொண்டு செல்லும் பணங்களை பறிமுதல் செய்யவேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி சோதனையில் ஈடுபட்டுவருகிறோம். முறையான ஆவணத்தை வைத்துக்கொண்டு பணம் எடுத்துச்செல்வோரை நாங்கள் தடுப்பதில்லை. இவ்வளவு பெரிய தொகையை கொண்டும் செல்பவர்க உரிய ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். இடையில் காவல்துறை அதிகாரிகள் வழிமறித்தால் சோதனை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதை விட மிக முக்கியம் இவ்வளவு பெரிய பணத்தை கொண்டு போகும்போது உரிய காவல்துறையின் பாதுகாப்போடு கொண்டு சென்றிருக்க வேண்டும் என தேர்தல் பாதுகாப்பு படையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic