உங்கள் சின்னம்! ஏழையின் சின்னம்!
நான் மட்டும் வெற்றி பெற்றால்...!
உங்களுக்காகவே நான்...!
இந்த மாதிரி டையலாக்கையே இந்த ஒரு மாசமா மக்கள் கேட்டு முடிச்சாங்க. மே 16 தேதி நாங்க போடுற ஒரு ஓட்டுக்குத்தானே இந்த அக்கப்போரு? என்கிற ரீதியில் மக்களை பிரச்சாரம் என்கிற போர்வையில் நச்சரித்து முடித்துவிட்டார்கள் இந்த அரசியல்வாதிகள். இனி மக்கள் தங்களுடைய ஆட்டத்தை ஆட இருக்கிறார்கள். ஆட்சியை தக்கவைப்போமா?, மீண்டும் ஆட்சியை பிடிப்போமா? இந்தவாட்டி நம்ம கூட்டணி ஆட்சிக்கு வருமா?, ஒரு தொகுதிலையாவது ஜெயிப்போமா?, டெபாசிட்டாவது கிடைக்குமா? இப்படி ஒவ்வொரு கட்சிகளும் யோசித்துக்கொண்டு தூக்கத்தை தொலைக்க, இன்று இரவு மக்கள் மட்டும் நிம்மதியாக உறங்குவார்கள்.

No comments:
Write comments