சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களிலும் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்துவருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சுட்டெறித்த அக்னி வெயில் குறைந்து, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுபெற்றுள்ளதால் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்ததது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல வழிந்து ஓடுகிறது. புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களிலும் வட கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அடுத்து 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச்செல்ல வேண்டாம் என அறிவுருத்தப்பட்டிருக்கிறார்கள்.

No comments:
Write comments