ராமச்சந்திரா கலசங்கரா மற்றும் சந்தீப் தாங்கே இருவரும் கடந்த 2008ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டது. அன்றிலிருந்து இருவரும் தலைமறைவாகிவிட்டனர். தற்போது இவ்வழக்கின் விசாரணை தீவிரமடைந்து வரும் வேலையில் தலைமறைவாக இருக்கும் இவ்விருவருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்புடையவர்கள் என கடந்த வாரம் என்.ஐ.ஏ தெரிவித்தது. 2007ஆம் ஆன்டு சம்ஜோத்தா இரயில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திலும் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தது.
மத்திய பிரதேசத்தில் வைத்து வெடிப்பொருட்களை தயார் செய்வதற்கும் அதனை கையாள்வதற்கும் இவ்விருவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரா என்பவர் தான் மாலேகானில் வெடிகுண்டுகளை மோட்டார் சைக்கிளில் வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மோட்டார் சைக்கிளை 2 வருடங்களாக அவரே உபயோகித்துக்கொண்டிருந்திருக்கிறார். தலைமறைவாக இருக்கும் இவ்விருவர் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.
வெடிகுண்டுவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் பெண் சாமியார் பிரக்யா அவர்களின் பெயரில் இருந்ததால் அவரும் கைது செய்யப்பட்டிருந்தார். சில நாட்கள் முன்பு அவருக்கு எதிரான ஆதாரங்கள் சரியாக இல்லை எனக்கூறி இவ்வழக்கிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
- புகழேந்தி

No comments:
Write comments