Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 15, 2016

அரவக்குறிச்சி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி தள்ளிவைப்பு - தேர்தல் ஆணையம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் வாக்குபதிவை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்தே வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுபொருட்கள் கொடுக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இத்தொகுதியில் திமுக சார்பாக தற்போது எம்.எல்.ஏவாக இருக்கின்ற கே.சி. பழனிச்சாமியும், அதிமுக சார்பில் முன்னால் போக்குவரத்துறை மந்திரி செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.


பழனிச்சாமிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பணம் பதுக்கிவைக்கப்படிருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனை அடுத்து வருமான வரித்துறையின் அவருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். இதே போல் சென்னை ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் பழனிச்சாமியின் மகன் வீட்டில் சோதனை நடத்தியதில் ரூபாய் 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இவ்வாறான புகார்கள் மற்றும் சோதனை நடந்ததின் விளைவாக அரவக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவை தள்ளிவைப்பதாகவும், இத்தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகின்ற மே 23ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என்று தேர்தல் ஆனணையம் தெரிவித்துள்ளது. புகார்களின் அடிப்படையில் தேர்தல் தேதியை தள்ளிவைப்பது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

தேர்தலை ஒத்திவைப்பது என்பது தேவையற்ற செயல். அதற்கு பதிலாக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்திருக்கலாம் என பா.ஜ.கவின் தேசிய செயலாளரும், தி. நகர் தொகுதியின் வேட்பாளருமான ஹெச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic