Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 15, 2016

கேரள மந்திரிகளுக்கும் தனக்கும் பாலியல் தொடர்பு உண்டு - சரிதா நாயர்

கேரள மாநில முதலைமைச்சர் உம்மண் சாண்டிக்கு தான் கமிஷன் கொடுத்துள்ளதாகவும், அவருக்கும் தனக்கும் பாலியல் ரீதியாக தொடர்பு இருந்திருக்கிறது என்று "டீம் லோசர்" நிறுவனத்தை நடத்தி வந்த சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் வீடுகள் மற்றும் அரசு அலுவலகத்திற்கு சூரிய சக்தியை கொண்டு மின் சக்தி வசதியை ஏற்படுத்தி தருகிறோம் என்ற பெயரில் "டீம் லோசர்" என்ற நிறுவனத்தை சரிதா நாயர் மற்றும் அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


முதலைமைச்சர் உம்மன் சாண்டி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடியில் இவர்கள் ஈடுபட்டதால் கேரள அரசியலில் பெரும் புயலை இப்பிரச்சனை கிளப்பியுள்ளது. இந்த மோசடியை குறித்து விசாரணை செய்ய 2013 ஆண்டே விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வரப்பட்டது.

விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான சரிதா உம்மண் சாண்டி மீது திடுக்கிடும் வகையில் குற்றச்சாட்டுகளை கூறினார். தான் இந்த நிறுவனம் நடத்துவதற்கு முதலைமைச்சருக்கு கமிஷன் கொடுத்திருப்பதாகவும், அவருக்கும் தனக்கும் பாலியல் ரீதியாக தொடர்பு இருந்ததாகவும் கூறி அதற்கான ஆதரங்களையும் முன்வைத்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறும்போது அரசு விருந்தினர் மாளிகை, கிளப் ஹவுஸ் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் தன்னுடன் பல எம்.பிக்கள், மந்திரிகள் உல்லாசமாக இருந்துள்ளதாகவும், இதற்கு ஆதாரமான ஆடியோ, வீடியோக்களை கமிஷன் முன்பு கொடுத்துள்ளதாகவும், தேவைப்பட்டால் நேரில் சென்று விளக்கமளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். விசாரணை கமிஷன் அனுமதி அளித்தால் என்னோடு யார் யார் இருந்தார்கள் என்ற விபரத்தை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

இது கேரளத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலைமைச்சர் உம்மண் சாண்டி கூறும்போது, தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகள் என்மீது அபாண்டமாக பழியை சுமத்த இவ்வாறு சூழ்ச்சி மேற்கொண்டுள்ளது. சரிதா கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளார். சரிதா மீது அவதூறு வழக்கு உம்மண்சாண்டி தரப்பில் தொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic