Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 26, 2016

பா.ஜ.க அமைச்சருக்கு தாவுத் இபுராகிமுடன் தொடர்பு...?


மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் ஏக்நாத் கட்சேவுக்கும் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கு சர்வதேச தீவிரவாதி தாவுத் இபுராகிமுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநில ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரீத்தி சர்மா அமைச்சர் ஏக்நாத்துக்கு தீவிரவாதி தாவுத் இபுராகீமோடு தொடர்பு இருப்பதாகவும், இருவரும் பல முறை தொலைபேசியில் பேசியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீசை சந்தித்து புகார் அளித்தார். இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

மும்பை காவல்துறை ஆணையர் தத்தாத்ரேயே செய்தியாளர்களிடத்தில் கூறும்போது "அமைச்சரின் தொலைபேசி எண் என்று கொடுக்கப்பட்ட நம்பரை சோதிக்கும்போது கடந்த 2015ஆம் ஆண்டும் செப்டம்பர் முதல் கடந்த ஏப்ரல் வரை எந்த ஒரு அழைப்பும் செய்ததாகவோ அல்லது வந்ததாகவோ பதிவு இல்லை. ஆனால் இது தொடர்பாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதனை நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்று கூறினார். அப்படியானால் இந்த விவகாரத்தில் அமைச்சருக்கு தொடர்பில்லையா? என்று கேட்டதற்கு காவல்துறை ஆணையர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பா.ஜ.க அமைச்சருக்கே தீவிரவாதிகளோடு தொடர்பு இருக்கிறது என்ற செய்தி வெளியாகியதிலிருந்து மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு எற்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic