மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதனை அடுத்து மீண்டும் அக்கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜி முதல்வரானார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி இடதுசாரி கடியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டது.
இந்த தேர்தலில் கணிசமான வெற்றிகளை பெற்ற காங்கிரஸ் கட்சி 2வது இடத்திற்கு முன்னேறியது, இடது சாரி கட்சிக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வாக்கு வங்கி அதிகரித்து 44 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து 15 வருடங்கள் கழித்து காங்கிரஸ் கட்சி மீண்டும் மேற்குவங்கத்தில் எதிர்கட்சி அந்தஸ்த்தை பெற்றது.
வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களை தக்கவைப்பதற்காக அக்கட்சியின் மாநில தலைவர் ஒரு புதிய டெக்னிக்கை செய்தார். அனைத்து எம்.எல்.ஏக்களையும் ரகசியமாக ஒரு இடத்திற்கு அழைத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார். அப்பத்திரத்தில் ஒரு போதும் கட்சியை விட்டு வேறொரு கட்சிக்கு தாவமாட்டேன், கட்சியின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன், கட்சியின் செயல்பாடுகளை எதிர்த்து கருத்து தெரிவிக்க மாட்டேன், கடைசி வரை சோனியா, ராகுல் தலைமையில் இயங்கும் காங்கிரஸ் கட்சியிலேயே இறுதி வரை இருப்பேன். இதில் ஏதேனும் மாறுபட்டு நடந்தால் உடனே பதவியை ராஜினாமா செய்வேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்சியின் எம்.எல்.ஏக்களை தக்கவைப்பதற்கே காங்கிரஸ் கட்சி திணறிக்கொண்டிருப்பதே இதற்கு சான்று, காரணம் சென்ற காலங்களில் கட்சியின் பல நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

No comments:
Write comments