Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 25, 2016

பஜ்ரங்தள் அமைப்பினர் நடத்திய துப்பாக்கி பயிற்சி - வைரலாக பரவும் வீடியோ



அயோத்தியில் பஜ்ரங்தள் அமைப்பினர் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூல வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது ஒருவகையான தற்காப்பு பயிற்சிதான் இதுபோன்ற பயிற்சிகளை செய்வதால் எந்த தவறும் இல்லை என உத்தரபிரதேச கவர்னர் ராம் நாயக் தெரிவித்துள்ளார்.

பஜ்ரங்தள் அமைப்பின் உறுப்பினர்கள் துப்பாக்கி, வாள், கத்தி மற்று லத்திகளை வைத்து அயோத்தியிலுள்ள ஒரு பள்ளிகூட்ட வளாகத்தினுல் பயிற்சியில் ஈடுபட்டனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தொப்பி அணிந்து முஸ்லிம்களைப்போல் வேடமணிந்தும் அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்துவது போன்ற பயிற்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்களால் தேசத்தை பாதுகாக்க முடியாது. இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை. இது முழுக்க தற்காப்புக்காக கொடுக்கப்பட்ட பயிற்சிதான் என நாயக் தெரிவித்தார். எல்லா விதமான கவ்விகளையும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். தற்காப்பு பயிற்சியும் இதில் அடங்கும். இது எதற்காக நடத்தப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் உணரவேண்டும், தற்காப்புக்கலை என்பது மிக அவசியமான ஒன்று, இது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு நாயக் செய்தியாளகளிடத்தில் தெரிவித்தார்.

பஜ்ரங்தள் அமைப்பின் மாநில நிர்வாகி சுரேந்திர மிஷ்ரா கூறும்போது "எங்களுக்கு எந்த மதத்தவர்களையும் புண்படுத்தும் நோக்கத்தோடு நாங்கள் இந்த பயிற்சியில் ஈடுபடவில்லை. பயிற்சியில் ஈடுபட்டவர்கள் யாரும் தொப்பி அணிய வேண்டும் என்று நாங்க நிர்பந்திக்கவில்லை. பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அவர்களாகவே தொப்பி அணிந்திருக்கின்றனர் என தெரிவித்தார்.



No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic