Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 25, 2016

அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் மரணம்



அதிமுகவின் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ சீனிவேல் இன்று காலை மரணம் அடைந்துவிட்டர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மே 17 தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற அடுத்த நாள் சீனிவேலுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 19ல் வெளியான தேர்தல் முடிவினெ போது 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சீனிவேல் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் தொடர்ந்து அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பதவி ஏற்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இன்று காலை அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்க இருக்கும் இந்த நாளில் சீனிவேல் மரணித்தது அதிமுக எம்.எல்.ஏக்களிடையே பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனிவேலின் மரணத்தை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 133 ஆக குறைந்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic