Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 25, 2016

பங்களாதேஷிகளின் ஊடுறுவல்களை முற்றிலுமாக தடுப்பேன்- சர்பானந்தா

குவாஹாத்தி: பங்களாதேஷிகளின் ஊடுருவல்களை தமது மாநிலத்தில் அதிகமாக நடப்பதாகவும், வெகுவிரைவிலேயே அவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என சர்பானந்தா தெரிவித்துள்ளார்.



சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போடோ குழு கட்சியின் ஆதரவோடு பா.ஜ.க அஸ்ஸாமில் முதன்முறையாக ஆட்சியை பிடித்தது. நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பதவியேற்ற பிறகு சர்பானந்தா பேசும்போது "அஸ்ஸாமில் பங்களாதேஷிகளின் ஊடுறுவல்கள் எல்லையோரங்களில் அதிகரித்து வருகின்றது. இதனை முற்றிலுமாக கட்டுப்படுத்தி பங்களாதேஷிகள் இல்லாத மாநிலமாக அஸ்ஸாம் மாநிலத்தை மாற்றுவேன். அஸ்ஸாம் மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை வழங்குவேன். மக்கள் துன்ப்பப்படும் அளவிற்கு எந்தவித சட்டத்தையும் நான் கொண்டு வர அனுமதிக்க மாட்டேன்.

மத்தியிலும் பா.ஜ.கவின் ஆட்சியே நடக்கிறது. மக்கள் மோடியின் ஆட்சியில் சந்தோஷமாக வாழ்கிறார்கள். தேசத்தில் அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழ்வதைப்போல ஒரு சுகமான் வாழ்க்கையை அஸ்ஸாம் மக்களுக்கு ஏற்படுத்தித்தருவேன்" இவ்வாறு சர்பானந்தா பேசினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic