கேரள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என அம்மாநில முதலைமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. தமிழகத்தை போலவே இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவுற்றது. பிரச்சாரத்திற்கு பின் கோட்டையத்தில் செய்தியாளர்களை சந்தித்த உம்மன் சாண்டி பேசும்போதும்,
கேரளாவிற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடி கேரள பழங்குடி மக்களின் குழந்தை இறப்பு விகிதாச்சாரத்தை மிகவும் பின் தங்கிய நாடான சொமாலியாவுடன் ஒப்பிட்டு பேசி கேரள மக்களின் கோபத்திற்கு ஆளாகி மிகப்பெரும் தவறை செய்துவிட்டார். இந்த தேர்தலில் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி அரசியல் கேரளத்தில் எடுபடாது. அதே போன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் குற்றவியல் அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்.
காங்கிரஸ் கட்சி இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், கடந்த தேர்தலி வெற்றி பெற்ற இடங்களை விட கூடுதலான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என உம்மன்சாண்டி கூறினார். சட்டக்கல்லூரி தலித் மாணவி ஜிஷா பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது, கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. தமிழகத்தை போலவே இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவுற்றது. பிரச்சாரத்திற்கு பின் கோட்டையத்தில் செய்தியாளர்களை சந்தித்த உம்மன் சாண்டி பேசும்போதும்,
காங்கிரஸ் கட்சி இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், கடந்த தேர்தலி வெற்றி பெற்ற இடங்களை விட கூடுதலான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என உம்மன்சாண்டி கூறினார். சட்டக்கல்லூரி தலித் மாணவி ஜிஷா பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது, கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

No comments:
Write comments