Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 18, 2016

டிரம்பின் கொள்கை அமெரிக்காவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் - ஹிலாரி கிளிண்டன்



 வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலிலில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரச்சாரங்களின் போது ஒருவருக்கொருவர் கடுமையாக சாடி வருகின்றனர்.

ஹிலாரி கிளிண்டன் பேசும்போது "இஸ்லாமியர்களுக்கெதிரான டொனால்ட் டிரம்பின் கொள்கை அமெரிக்காவிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. டிரம்பினுடைய பேச்சு அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கும் எதிரானது, இதனால் உலக முஸ்லிம்களின் எதிர்ப்பை அமெரிக்க சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். ஒரு சில தீவிரவாத அமைப்புகள் செய்யும் தாக்குதல்களுக்காக மொத்தமாகவே இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கூறுவது முட்டாள்த்தனமான செயலாகும். டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவிற்கு சிக்கல் தான் ஏற்படுமே ஒழிய முன்னேற முடியாது" என ஹிலாரி கிளிண்டன் தனது பிரச்சாரத்தின் போது பேசினார்.

ஆஸ்திரேலிய நாட்டிலும் டொனால்ட் டிரம்பிற்கு எதிர்ப்பு எழுந்துள்லது. அங்கும் பிரதமர் தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சி தலைவர் பில் ஷேர்டென் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்பின் பேச்சு அநாகரீகமானது என்றார். அமெரிக்காவுடனான நல்லுறைவை நாங்கள் கட்டாயம் மேம்படுத்துவோம், அதே சமயம் டிரம்ப்போடு நட்புறவு கொள்வது கடினமானது என நாங்கள் கருதுவதால் ஹிலாரியே அமெரிக்க அதிபராக வர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

சர்ச்சையான பேச்சுக்களால் சொந்த கட்சியிலேயெ பின்னடவை சந்தித்து வரும் டிரம்பிற்கு மக்களின் ஆதரவு கிடைக்காது என்று கூறப்படுகிறது. எனவே ஹிலாரியே வெற்றி பெருவார் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic