கடந்த 11ஆம் தேதி அயோத்தியில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் பள்ளிக்கூட வளாகத்தில் வைத்து பஜ்ரங்தள் அமைப்பினர் பயிற்சியில் ஈடுபட்டனர். துப்பாக்கிகளை ஏந்தி சுடுவது போலவும், கூர்மையான வாள்களைக்கொண்டு தாக்குவது போலவும் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும் எதிரிகள் தொப்பி அணிந்து இருப்பதுபோல ஆடை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக பஜ்ரங்தள் கூறும்போது, இது வெறும் தற்காப்பு பயிற்சிதான் என்றும், தற்காப்பு பயிற்சி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவப்படக்கூடியது, இதை இன்னும் பல ஊர்களில் நாங்கள் நடத்துவோம் என்று கூறினர். இதனை அடுத்து பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் வந்தது. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மத துவேசத்தை பரப்புதல் என்ற அடிப்படையில் பஜ்ரங்தள் நிர்வாகி மகேஷ் மிஷ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்றுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பஜ்ரங்தள் அமைப்பு என்பது வி.ஹெச்.பி அமைப்பின் இளைஞர் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments