சந்தனக்கடத்தல் வீரப்பினின் கூட்டாளிகள் 4 பேரை மைசூர் மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்துள்ளது கர்நாடகா அரசு.
தமிழகம் மற்றும் கர்நாடகா காவல்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக பல காலம் இருந்து வந்தவர் சந்தனக்கடத்தல் வீரப்பன். சந்தனக்கட்டைகளை கடத்துவதை தாண்டி பெரும் பெரும் முக்கிய புள்ளிகளை கடத்தி அதன் மூலம் இரு மாநில அரசுக்கும் தனது கோரிக்கைகளை வலியுறுத்திவந்தான். தமிழக கூடுதல் டி.ஜி.பியாக இருந்த விஜய்குமார் தலைமையிலான பாதுகாப்பு படையினர் சந்தக்கடத்தல் வீரப்பனை சுட்டு கொன்றனர்.
வீரப்பனின் கூட்டாளிகளான அன்புராஜ், தங்கராஜ், அப்பர்சாமி, துப்பாக்கி சித்தன் ஆகிய நான்கு பேரும் கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். நாட்டின் 70வது சுதந்திர தினத்தை ஒட்டி நன்னடத்தையின் காரணமாக அவர்கள் நால்வரையும் விடுதலை செய்யுமாறு கர்நாடக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 348 பேரை கர்நாடக அரசு இந்த சுதந்திர தினத்தில் விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments