Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 16, 2016

ஜல்லிக்கட்டு போட்டி ஒரு ஆபத்தான விளையாட்டு - மேனகா காந்தி


தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் ஆபத்தான விளையாட்டு என்றும் அதனை இனிமேலும் நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த மேனாக் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது "பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது, ஆனால் இன்னமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. குளிர்கால கூட்டத்தொடரில் இது கண்டிப்பாக நிறைவேறும் என எதிர்பார்கிறோம்.

நாட்டில் யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. தற்போது 20 ஆயிரம் யானைகள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா போன்ற மா நிலங்களில் யானைகள் அதிகமாக உள்ளது. யானைகள் அடிக்கடி ரெயில்களில் அடிபட்டு இறக்கின்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு யானை இது போல் விபத்தில் சிக்கி இறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். வனப்பகுதிகளில் யானைகள் அதிகமாக நடமாடும் இடங்களில் இரயிலின் வேகத்தை குறைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். வனப்பகுதிகளில் யானைகள் செல்லும் வழித்தடங்கள் அழிந்துவிட்டன். இதனால் யானைகள் வழிதவறிச் சென்று விபத்தில் சிக்கி இறந்துவிடுகின்றது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான தடை அமலில் உள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியம் மற்று வரலாற்று சிறப்பு மிக்க விளையாட்டுத்தான் ஆயினும் அது ஒரு ஆபத்தான விளையாட்டு. அதற்கு அனுமதி வழங்க கூடாது என்பதே என்னுடைய வாதம். தமிழகத்தில் உள்ள பா.ஜ.கவின் திறமைமிக்கவர்களாக இருக்கின்றார்கள். மக்களுகு செய்ய வேண்டிய எவ்வளவோ காரியங்கள் இருக்கிறது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக குறல் கொடுப்பதை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். " இவ்வாறு மேனகா காந்தி கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic