பீகார் மாநிலம் தானாபூரில் பா.ஜ.க தலைவர் அசோக் ஜெய்ஸ்வால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலா சாலை பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 4 குண்டுகள் பாய்ந்து அசோக் ஜெய்ஸ்வால் உயிரிழந்தார் என்று உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இருவரை காவலில் எடுத்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மத்திய மந்திரி ராம்கிரிபால் யாதவ் உயிரிழந்த பா.ஜ.க தலைவரின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுவதன் விளைவே இந்த கொலை என்று ராம்கிரிபால் யாதவ் கூறியுள்ளார். கொலைக்கு எதிராக போராட தானாபூரில் பா.ஜ.க முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. நேற்றும் பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பா.ஜ.க தலைவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments