Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 16, 2016

கஷ்மீரில் மீண்டும் பதட்டம் - 5பேர் பலி!


கஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்குமேலாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் நடந்தால் வெவ்வேறு சம்பவங்களின் மூலம் 5 அப்பாவி பொது மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கஷ்மீரில் கடந்த ஜூலை 9ஆம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தளபதி என்று கருதப்பட்ட புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லபட்டதை அடுத்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. கஷ்மீர் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத்துவங்கினர். இப்போராட்டத்தை கட்டுப்படுத்த இந்திய இராணுவமும் மத்திய ரிசர்வ் படை போலிஸ் அதிகாரிகளும் அங்கு குவிக்கப்பட்டனர். இதுவரை நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள் மூலம் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பல மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் வன்முறை சம்பவங்கள் வெகுவாக குறைந்த நிலையில் சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டது. நேற்றைய தினம் தெற்கு மற்றும் மத்திய கஷ்மீர் பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்தது.

மத்திய கஷ்மீர் பகுதியான அரிபந்தம் கிராமப்புரங்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தடுக்க மத்திய ரிசர்வ் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் காயம் பட்ட பலரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலருடைய நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்க அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அனந்த்னாக் மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் இந்திய இராணு வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் பலியானார், 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கஷ்மீரில் அமைதி கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக்கொண்டிருந்த சமயத்தில் இவ்விரு சம்பவங்கள் மூலம் பதட்டம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இதுவரை கஷ்மீர் வன்முறை சம்பவத்தின் மூலம் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானவர்கள் தங்களது கண்பார்வையை இழந்துள்ளனர். இதில் அதிக அளவில் 15வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic