Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 17, 2016

உடல் ஆரோக்கியத்திற்கு நாய்-65..! உவ்வ்வ்வ்வ்வே...


நாய் இறைச்சியில் அதிக வைட்டமின் உள்ளது, எனவே குடிமக்கள் அனைவரும் அதனை உண்ண வேண்டும் என வடகொரியா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஐயோ! என்ன கண்றாவிடா? என்று கேட்கு அளவிற்கு சீனா, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் மக்களின் உணவுப்பழக்கங்கள் இருப்பது நாம் யாவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில் தற்போது வடகொரியாவில் நாய் இறைச்சி மிக பிரபலமடைந்துள்ளது. அங்குள்ள இறைச்சி கூடங்களில் நாய்கள் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் பல காலமாக இருந்து வருகிறது. இது போன்ற செயல்களை அங்குள்ள விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் யோங்கின் கொடுத்த அறிவுரை பீதியை கிளப்பி கொமட்ட வைக்கின்றது. அவர் கூறியதாக வடகொரிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்திருப்பதாவது, நாய் இறைச்சியில் அதிக  அளவு வைட்டமின் உள்ளதால் நாட்டு மக்கள் அனைவரும் அதனை உண்ண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். நாய் இறைச்சி சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல்கள் ஆரோக்கியமானதாக செயல்படுகின்றன. மேலும் கோழி, மாடு, பன்றி மற்றும் வாத்து இறைசிகளில் இல்லாத அளவிற்கு நாய் இறைச்சியில் அதிக வைட்டமின் உள்ளது. எனவே இவற்றை குடிமக்கள் அதிகமாக சாப்பிட வேண்டும் என கூறி உள்ளார்.

இத்தோடு நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை என்று கூட சொல்லலாம், ஆனால் இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு நாயை சித்திரவதை செய்து கொன்ற பிறகு அதன் இறைச்சியை சாப்பிட்டால் அது மேலும் சுவையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் நாய்களை அடித்து துன்புறுத்திய பிறகுதான் கொல்ல வேண்டும் என அந்த ஊடகம் வலியுறுத்தியுள்ளது. வடகொரியாவில் செயல்படும் பிற ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், குறிப்பாக நாய் குட்டிகளின் மிருதுவான இறைச்சி நோயாளிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது என தெரிவித்துள்ளது.

அது சரி ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மிருகத்தை வைத்து தான் ஆட்சி நடக்கிறது போலும்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic