Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 17, 2016

கலெக்டருக்கு பளார் கொடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ


மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ துணை கலெக்டரின் கன்னத்தில் அறைந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய அரசியல் தலைவர்களுக்கு சேவை மனப்பாங்கு இருக்கிறதோ இல்லையோ, கர்வம் கொண்ட மனப்பாங்கு கண்டிப்பாக இருக்கும். எந்த ஒரு படிப்பறிவும் இல்லாமல் ரவுடித்தனம் செய்துவிட்டு செல்வாக்குடன் அரசியல்வாதிகளாக மாறும் பலர் பதவிக்கு வந்ததும் தமக்கு கீழ் வேலை பார்க்கும் அதிகாரிகளை ஏதோ தனது சொந்த வேலைக்காரர்கள் போன்று பாவித்து வருகிறார்கள். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ சுரேஷ் லாட் துனை மாவட்ட ஆட்சியர் அபய் கல்குத்காரை கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து உள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

துணை கலெக்டர் அலுவலகத்தில் எண்ணெய் குழாய் பதிப்புக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதிகாரியை தாக்கிய எம்.எல்.ஏ சுரேஷ் லாட் குடிபோதையில் இருந்தார் என்றும் செய்திகள் கூறுகிறது.

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றபோது அமைதியை இழந்த சுரேஷ் லாட், துணை கலெக்டரை தாக்கு உள்ளார் இவ்விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி விலகிக்கொண்டது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், பணியில் இருக்கும் அதிகாரியை பாதுகாக்க நாட்டில் சட்டம் உள்ளது. அரசு அதிகாரி தாக்கப்பட்டார் என்றால் அவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க வேன்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக சுரேஷ் லாட் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.


துணை கலெக்டர் அபய் கல்குத்கார் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்போவதில்லை, உயர் அதிகாரிக்கு கடிதம் மட்டும் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு சுதந்திர தினத்தில் ஒடிசா மாநில அமைச்சர் தனது பாதுகாப்பு அதிகாரிக்கு தனது செருப்பை மாட்டிவிட கூறிய சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic