கஷ்மீர் விவகாரத்தால் இந்தியா பாகிஸ்தான் நாட்டு தலைவர்களுக்கிடையே கடும் வார்த்தை போர் நிகழ்ந்து வருகிறது. வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி வரும் ஹபீஸ் சயீத்தை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
கஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதியாக செயல்பட்ட புர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதில் 65 பேர் தற்போதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இன்னமும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் மறைமுகமாகவும் நேரடியாகவும் கஷ்மீர் மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
கஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறோம் என்ற பெயரில் பிரிவினையை தூண்டும் வகையில் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் பகிரங்கமாக பேசி வருகிறார். இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும் என சமீபத்தில் அவர் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு 10 மில்லியன் டாலரை அமெரிக்கா பரிசாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசும் இதற்கு முன்பு ஹபீஸ் சயீத் தொடர்பான எந்த செய்திகளையும், அவர் அளிக்கும் பேட்டிகளையும் ஒளிபரப்பக்கூடாது என தடை விதித்திருந்தது.
ஆனால் அனைத்து தடைகளையும் மீறி பிரிவினையை தூண்டும் விதத்திலும், கஷ்மீர் மக்களை போராடுவதற்கு உசுப்பிவிடும் வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளில் அவர் பேசி வருகிறார். அவர் பேசிய அனைத்தையும் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பி வருகின்றன. இதனை காணும் போது பாகிஸ்தான் அரசு மறைமுகமாக ஹபீஸ் சயீத்திற்கு ஆதரவு அளித்து வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சமீபத்தில் தொலைக்காட்சியில் பேசிய ஹபீஸ் சயீத் கூறும்போது "கஷ்மீர் மக்கள் சிந்திய இரத்தம், கொடுத்த உயிர் வீண் போகாது எனவும், நிச்சயம் ஒரு நாள் கஷ்மீர் பாகிஸ்தானோடு இணைக்கப்படும். கஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனை தடுக்க பாகிஸ்தான் தனது இராணுவத்தை கஷ்மீருக்குள் அனுப்ப வேண்டும்" என பேசியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments