சமூக வலைதளங்கள் இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் என்கிற நிலையை தாண்டி பெரும் ஊடகங்களாக மாறிவிட்டன. ஒவ்வொரு மனிதனும் தனக்கு நேர்ந்த, தன்னுடைய கருத்தை வெளி உலகிற்கு எடுத்துச்செல்வதற்கு சமூக ஊடகங்களையே அதிகம் நாடுகின்றனர்.
தனி மனித பயன்பாட்டினையும் தாண்டி விருப்பு, வெறுப்பு பிரச்சாரங்களும் இந்த சமூக வலைதளங்களில் அதிகம் நடத்தப்படுவதையும் பார்கிறோம். ஒரு சித்தார்ந்தத்தை எதிர்த்தோ, ஆதரித்தோ ஒருவர் கருத்தை தெரிவிக்கும்போது அதனை நூற்றுக்கணக்கானவர்களை கண்டு, ஆயிரக்கணக்கானவர்களுக்கு பகிர அது கோடிக்கணக்கானவர்களை போய் சென்றடைகிறது.
சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவை முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது. சமீபத்தில் பிபிசி சேனல் வெளியிட்டுள்ள செய்தியில் டுவிட்டரில் ஆங்கிலத்தில் உலகளவில் பகிரப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு சார்ந்த டுவீட்கள் அதிக அளவில் கூடியிருப்பதாக தெரிவிக்கின்றனது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இஸ்லாமிய எதிர்ப்பு, தரக்குறைவான அல்லது வெறுப்புணர்வை காட்டும் டுவீட்கள் மொத்தம் 7 ஆயிரம் அனுப்பபட்டதாக இங்கிலாந்து நாட்டின் கருத்தாய்வு நிறுவனமான டெமோஸ் அமைப்பைசேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவிலிருந்து வெளிவந்த இது போன்ற டுவீட்களில் பெரும்பாலானவை பிரிட்டனில் இருந்தே வந்துள்ளன. ஜூன் 15 ஆம் தேதி அன்று இது போன்ற டுவீட்கள் அதிகபட்சமாக பதிவாகி உள்ளன.
இதற்கு முந்தைய நாள், பிரஞ்சு நகரமான நீஸில் டிரக் தாக்குதல் நிகழ்ந்து 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பினர் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments