Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 18, 2016

பயங்கரவாதத்தை ஒழிக்க முஸ்லிம்கள் உதவ வேண்டும் - டொனால்ட் டிரம்ப்


பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிய நீங்கள் உதவ வேண்டும் இல்லையென்றால் உங்கள் சமூகத்தின் மீது தான் குறை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது வரும் என இஸ்லாமியர்களை நோக்கி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தி டி.வி நட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல்வாதியாக உருவெடுத்திருக்கும் டொனால்ட் டிரம்ப் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பெயர் போனவராக திகழ்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக சொல்லத்துவங்கிய நேரத்தில் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் இஸ்லாமியர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பேசினார். தற்போது பயங்கரவாதத்தை ஒழிக்க உதவ வேண்டும் என கோரியுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல ஃபாக்ஸ் நியுஸ் தொலைக்காட்சியில் கடந்த செவ்வாய்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது, " நாம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு விழிபுணர்வுடன் இருக்க வேண்டும். நிஜமாகவே நமக்கு முஸ்லிம்கள் உதவி செய்ய வேண்டும், ஏனென்றால் அவர்களது சமூகத்திற்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நாம் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவர்கள் நமக்கு உதவி செய்ய முன் வரவேண்டும்"

முஸ்லிம்கள் நமக்கு உதவி செய்ய முன்வரவில்லை என்றால், அவர்களைத்தான் குற்றஞ்சாட்ட வேண்டும். ஓர்லேண்டோ விடுதியில் தாக்குதல் நடத்திய சித்தீக் மத்தீனின் தகப்பனை அமெரிக்காவை விட்டு வெளியேற்றுவேன். உங்களுக்கு தெரியுமா ஓர்லேன்டோ துப்பாகிச்சூடு நடந்த பின்பு அவர் எந்த கவலையும் கொள்ளாமல் சிரித்துக்கொண்டிருந்தார் என டொனால்ட் டிரம்ப் கூறினார்.

உலகம் முழுவதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அவர்கள் தங்களைப்பற்றி அதிகமான செய்திகளை பரப்பி வருகிறார்கள். நாம் கூட அவ்வளவு செய்திகளை பகிர்ந்திருக்கமாட்டோம். சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய அமைப்பிற்கு ஆட்களை திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். நாம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தனக்கு எதிராக அதிபர் தேர்தலில் களம் கண்டிருக்கும் ஹிலாரி கிளிண்டனை ஊடகங்கள் பாதுகாத்து வருகிறது. அவர் அமெரிக்க அதிபர் ஆவதற்கான தகுதிகள் இல்லாதவர் என டிரம்ப் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic