வடக்கு மாகாண அமைச்சரவையும், அதன் முதல்வரும் கூறி வரும் சில விசயங்களை ஏற்றுக்கொள்ள முடியாத போதிலும் வடக்கு மாகாண மக்கள் பிரச்சனைகளிலிருந்து இன்னமும் பூரண விடுதலை பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் புகுடாவை நேற்று சந்தித்த பின்னர், தனது யாழ்பாணம் பயணம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது சந்திரிகா இவ்வாறு கூறியுள்ளார்.
எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜனநாயக செயல்பாடுகளும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கம் கையாளும் நெறிமுறைகளும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கட்சிகளை திருப்தியடையச் செய்துள்ளது என தான் நம்புவதாகவும் சந்திரிகா தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்விசயத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவர் அவர் தெரிவித்தார்.
போர் முடிந்த பின்னர் கடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களுக்கு பாதுகாப்பான் சுழலையோ, நல்லிணக்கத்தையோ ஏற்படுத்த முனையவில்லை என தெரிவித்த சந்திரிகா, தற்போதைய அரசு நல்லிணக்கத்தை பலப்படுத்தி தமிழ் மக்கள் எதிர் நோக்கும் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்னால் இருந்து செயல்பட்டுவருவதாக சந்திரிகா கூறியுள்ளார்.

No comments:
Write comments