ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இந்தியா தொண்டு நிறுவனத்திற்கு எதிராக ஏ.பி.வி.பி அமைப்பினர் பெங்களூரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், பாதுகாப்பு கருதி அந்த நிறுவனம் தனது அனைத்து கிளை அலுவலகங்களையும் மூடியுள்ளது.
ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் மனித உரிமை அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் பெங்களூரில் கஷ்மீர் விவகாரம் தொடர்பாக கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. இதில் கஷ்மீர் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் பங்கெடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது இந்தியாவிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தங்களது அமைப்பின் உறுப்பினர்கள் யாரும் இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்தபோதும், பா.ஜ.கவின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி அமைச்சைச்சேர்ந்த மாணவர்கள் பெங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறும்போது " நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் என்ன கோஷம் எழுப்பப்பட்டது என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறும்போது "என்ன மாதிரியான கோஷங்கள் எழுந்தது என்பது தொடர்பான் முழுமையான தகவல்கள் கிடைக்காத வரை வழக்கு பதிவு செய்ய முடியாது. அப்படி செய்தால் இந்திய சுதந்திர போராட்டத்தி ஆங்கிலேயர்கள் இந்தியர்கள் மீது வழக்கு பதிவு செய்தது போல ஆகிவிடும்" என்று தெரிவித்துள்ளார்.
ஏபிவிபி மாணவ அமைப்பின் இந்த தொடர் போராட்டத்தால் ஆம்னெஸ்டி நிறுவனம் சென்னை, புனே, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் உள்ள தங்களது அலுவலகத்தை பாதுகாப்பு கருதி மூடிவிட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது.

No comments:
Write comments