எப்படியாவது இந்திய அணிக்காக சர்வதேச ஹாக்கி போட்டியில் விளையாட வேண்டும் என்பதே தனது லட்சியாமாக கொண்ட பழங்குடி இனத்தைச்சேர்ந்த வீராங்கனை படிப்பு செலவிற்காக பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கிறார்.
தகுதிகளும், திறமைகளும் தன்னகத்தே கொண்டிருந்தாலும், உரிய அங்கீகாரம் கிடைக்காமல் எத்துனையோ திறமைசாலிகள் இவ்வாறு மறைந்தே வாழ்ந்து வருகின்றனர். அவர்களையெல்லாம் வெளிக்கொண்டுவராமல் எத்துனை ஒலிம்பிக் போட்டிகள் வந்தாலும் பதக்கம் வெல்ல முக்கிக்கொண்டேதான் இருக்க வேண்டும்.
மத்திய பிரதேச மாநிலம் மாண்டசவுர் மாவட்டம் பழங்குடி இனத்தைச்சேர்ந்த சிறுமி சாகு டாவர், மாநில அளவில் பல ஹாக்கி போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் என்னற்ற பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார். ஆனால் என்ன செய்வது வறுமையின் பிடியில் சிக்கி அவரது குடும்பம் தவித்து வருவதால் படிப்பு செலவிற்காக வீடுகளுக்குச்சென்று பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கிறார். இதே போன்று இன்னொரு சிறுமி சங்கீதாவும் இதே கிராமத்தில் வசித்து வருகிறார். இருவருக்கும் திறமைகள் இருந்த போதிலும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தில் பிறந்ததால் இவர்களது திறமைகள் வெளிவராமலேயே கிடக்கின்றது.
இந்த இரு சிறுமிகளுக்கு தந்தை கிடையாது. தங்களுடைய குழந்தை பருவத்திலேயே தந்தையை இழந்துள்ளனர்.
சாகு ஒவ்வொரு நாளும் தனது பள்ளி மைதானத்தில் ஹாக்கி மட்டையை கையில் ஏந்தியவாறு பயிற்ச்சியில் ஈடுபட்டுவருகிறார். மாநில அளவிலான போட்டிகளுக்கு இரண்டு முறை தேர்வாகியுள்ளார். அவரது தாயார் கூலி வேலை செய்து தங்களது வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்து வருகின்றனர். நூதான் மிடில் ஸ்கூலில் படித்து வரும் சாகு தனக்கு இத்துனை தடைகள் இருந்தாலும் இந்திய அணிக்காக விளையாடவேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. "எனது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்" என சாகு சொல்லும்போது மனதை வேதனை தொட்டுவிட்டு செல்கிறது. இந்தளவிற்கு தன்னம்பிக்கையோடு இருப்பவர்களை அரசு கண்டெடுத்து அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


No comments:
Write comments