கஷ்மீரில் போராளிகளை வேட்டையாடுவதற்காக பொதுமக்களை இந்திய இராணுவம் கேடயமாக பயன்படுத்திகிறார்கள் என மெஹபூபா கூறிய குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கஷ்மீர்ல் மெஹபூபாவின் பி.டி.பி கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது. கஷ்மீரில் கடந்த 45 நாட்களாக நடந்து வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகிறது. இதனால் வரை கஷ்மீர் பிரச்சனைக்கு பாகிஸ்தானை குற்றஞ்சாட்டி வந்த மெகபூபா தற்போது இந்திய இராணுவமும் தவறிழைத்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுதந்திரதினம் அன்று பேசிய மெகபூபா கஷ்மீர் பிரிவினை வாதிகளை எதிர்த்து போரிடுவதற்காக இந்திய இராணுவம் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி வருகிறது. 1990களில் அரசியல் பயணத்தை துவக்கினேன். அன்று முதலே பிரிவினை வாதிகளை தேடுவதாக கூறி இந்திய இராணுவம் அத்துமீறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சோதனை என்கிற பெயரில் பலரும் அவதிக்குள்ளாக்கப்பட்டார்கள். ஏராளமான கஷ்மீர் இளம்பெண்கள் இந்திய இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அன்றுமுதலே அச்சத்தோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு எதிராக நான் ஏற்கனவே குரல் கொடுத்திருக்கிறேன். இப்போதும் அதே தவறை இந்திய இராணுவம் செய்து கொண்டிருக்கிறது" என மெகபூபா பேசினார்.
கஷ்மீர் மாநில முதல்வரே இப்படி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிபிசி செய்தியாளர் அல்தாப் ஹூசைன் கூறும்போது "ஏற்கனவே பாதுகாப்பு படையினர் மீது மக்கள் இந்த குற்றச்சாட்டுக்களை கூறி வந்தனர். இப்போது முதல்வரே கூறியிருக்கிறார். இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்" என்று கூறினார். பிரிவினைவாத தலைவர் மிர்வாஸ் உமர் பாரூக் கூறும்போது "இதைப்பற்றி பேசுவதற்கு முதல்வர் மெகபூபாவிற்கு எந்த தகுதியும் கிடையாது. இவ்வளவு நாளாக இவர் மவுனம் காத்துவிட்டு இப்பொழுதுதான் வாய் திறந்திருக்கிறார்" என குற்றஞ்சாட்டியுள்ளார்.

No comments:
Write comments