Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 18, 2016

சபாநாயகரின் செயல் எதேச்சதிகாரமானது - ஜி.ராமகிருஷ்ணன்


விவாதங்கள், விமர்சனங்கள், போராட்டங்கள் எல்லாம் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும் அதனை சகித்துக்கொள்ள முடியாத வகையில் நடவடிக்கை எடுப்பது என்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதும் சரி தற்போது பா.ஜ.க ஆட்சியிலும் சரி நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடப்பதுண்டு. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் போராட்டங்களும் நடப்பதுண்டு. போராட்டங்கள் காரணமாக சில நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது வரை எந்த உறுப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் நடைபெறும் விவாதங்கள், விமர்சனங்கள், போராட்டங்கள் எல்லாமே ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும். இதனை கூட சகிதுக்கொள்ள முடியாத வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் நடந்து கொண்டிருப்பது எதேச்சதிகாரமானது. எம்.எல்.ஏக்களின் இடை நீக்கம் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சென்ற அதிமுக ஆட்சிகாலத்தில் அப்போதைய எதிர்கட்சியான தேமுதிக எம்.எல்.ஏக்க்களை இடை நீக்கம் செய்த நடவடிக்கயை ரத்து செய்ததோடு, ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

திமுக உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக இடை நீக்கம் செய்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. சபாநாயகர் தனது நடவடிக்கையை திரும்பப்பெறவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic