புதுடெல்லி: உறியடி விளையாட்டிற்கு மும்பை நீதிமன்றம் வழங்கிய கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி நாளை முன்னிட்டு உறியடி விழா நடைபெறுவது வழக்கம். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். ஒருவர் மீது ஒருவர் ஏறி, மிக உயரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் பானையை உடைக்க வேண்டும். இந்த விழாவிற்கு கட்டுபாடுகளை மும்பை நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு விதித்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறும்போது கிருஷ்ணர் வெண்ணெய் திருடியிருக்கிறார் என்றுதான் புராணங்களில் படித்திருக்கிறோமே தவிற ஒருவர் மீது ஒருவர் ஏறி பிரமிட் போன்று சாசகம் செய்ததாக யாரும் படித்திருக்கவில்லை. இருந்தபோதிலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் இந்த சாகச விளையாட்டிற்கு மும்பை நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை உறுதி செய்கிறோம். 18 வயதுக்குட்பட்டவர்கள் யாரும் இதில் பங்கேற்க கூடாது, மேலும் 20 அடிக்கும் உயரமாக மனித பிரமிட் ஏறக்கூடாது என்ற மும்பை நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை, இம்மாதம், 25ல், நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments