Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 14, 2016

மரித்தால் கூட மறக்காது..! நா. முத்துக்குமாரின் கவிதை வரிகள்


பட்டுத்தறி இழைகளும்
பிஞ்சுவிரல் பிழைகளும்
நட்டுவைத்த கோபுரத்தில்
பொட்டுவைக்கும் புறாக்களும்

பெருமாள் கோயில் குளக்கரையில்
மொட்டைத் தலை முகங்களும்
புதிதாய் வீதி சந்திப்பில்
முளைத்த சிக்னல் மரங்களும்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு
அண்ணா இங்கே பிறந்ததும்
கடவுள் மறுப்புக் கொள்கை எல்லாம்
அப்பா சொல்லி அறிந்ததும்

பாலாற்றில் வெள்ளம் வர‌
பார்த்துவரச் சென்றதும்
பாலாறு பாழாறாய்
நீரின்றி நின்றதும்

அடடா,, அன்று நான் படித்த‌
அந்திரசன் பள்ளியதும்
சாலமன் சார் நகர்ந்ததுமே
சி.என்.ராஜேஷ் கிள்ளியதும்

பச்சையப்பன் கல்லூரி
படிக்கத் தந்த புல்வெளியும்
கச்சீஸ்வரர் மண்டபத்தில்
கடிக்கத் தந்த தேங்காயும்


கோயில் சிற்பம் பார்த்தவுடன்
வெள்ளைக்காரன் துள்ளுவதும்
'வா...வா சேலை வாங்கித் தாறேன்
என்றே கமிஷன் அள்ளுவதும்

இன்றும்கூட குரல் கேட்கும்
இஞ்சி மரப்பா பஸ் ஸ்டாண்டும்
இலையில் கட்டிப் பூ விற்கும்
ரயில்வே சாலை மார்க்கெட்டும்

ஸ்ரீதர் கேப்பில் வடை தின்று
சங்கம் தியேட்டர் போனதுவும்
ரங்கசாமி குளம் அருகே
சைக்கிள் பஞ்சர் ஆனதுவும்

ஏழாம் அறிவில் புகழ்பெற்ற‌
போதி தர்மர் பெருமைகளும்
மூன்றாம் அறிவும் இல்லாத‌
மூத்திரச் சந்து சிறுமைகளும்

எங்கே போய் நான் வாழ்ந்தாலும்
எனக்குள் வீசும் மண்மணமும்
வாடாபோடா என்றழைக்கும்
வாஞ்சையான நண்பர்களும்

மார்கழி வாசல் கோயில்களும்
தேரடி வீதித் தேவதையும்
மரித்தால்கூட மறக்காது
காஞ்சி எண்ணு இறக்காது!



நன்றி: அருள்சிகாமணி லக்ஷ்மணன்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic