கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரியமிக்கி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. வரக்கூடிய வருடத்திலும் இப்போட்டிக்கான அனுமதி கிடைப்பதும் சந்தேகமே. இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் சார்பில் உலகம் முழுவதும் பிரச்சாரம் நடைபெற துவங்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டின் சாரம்சம் விலங்குகளை வதைக்கும் செயல் அல்ல என்பதை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் இப்பிரச்சாரம் அமையவிருக்கின்றது. இங்கிலாந்தில் வசிக்கும் சில இந்தியர்கள் இதற்காக பிரச்சாரத்தை துவக்கிவிட்டனர்.
லண்டனிலிருந்து இப்பிரச்சாரத்தை நடத்தியவர்கள் சார்பில் தெரிவிப்பதாவது, " நாங்கள் எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது அமைப்புகளுக்கோ எதிரானவர்கள் இல்லை. எங்களுடைய நோக்கமெல்லாம் ஜல்லிக்கட்டு தொடர்பான விழிப்புணர்வை உலகம் முழுவதும் எடுத்துச்செல்லவேண்டும் என்பதே. இத்தகைய போட்டிகளுக்கு அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. வெகுவிரைவிலேயே உலகம் முழுவதும் இந்த கலாச்சார விளையாட்டின் சாரம்சத்தை புரிந்து கொள்வார்கள்." என தெரிவித்தார்.
தமிழ்நாடு கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த இந்தியர்கள் லண்டனில் பதாகைகளை ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளனர். இதில் பங்கெடுத்த பெரும்பாலானவர்கள் ஐ.டி. துறையைச்சேர்ந்தவர்கள் என்றும் அதுவும் 25 முதல் 35 வயதுடைய இளைஞர்களாவர்.
தமிழகத்தில் பாரம்பரிய மிக்க விளையாட்டு என்பதற்காக ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு அனுமதி வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments