Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 19, 2016

நிறைவடைந்த அமர்நாத் யாத்திரை!


அமர்நாத் யாத்திரை நேற்றோடு நிறைவடைந்தது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 2 லட்சம் பேர் லிங்கத்தை தரிசனம் செய்தனர்.

ஜம்மு கஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்கும் வகையில் பகதர்கள் யாத்திரை மேற்கொள்வார்கள். 48 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை கடந்த மாதம் 2 ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. எனினும் வரும் 20ஆம் தேதி வரை பகல்காமில் விசர்ஜன பூஜை நடக்கும். இத்துடன் யாத்திரை நிறைவு பெறும்.

இந்த ஆண்டு யாத்திரையின் போது 21 யாத்திரிகள், 2 உள்ளூர் மக்கள், துணை இராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 21 பேர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பக்தர்கள், 10 உள்ளூர் மக்கள் நிலச்ச்சரிவில் காயமடைந்துள்ளனர். மொத்தம் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இவ்வருடம் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பக்தர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளது. கஷ்மீரில் நடக்கும் வன்முறை சம்பவங்களால் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic