Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 17, 2016

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய சிந்து


ரியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பாட்மிண்டன் கால் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் இகான் வாங்கை சிந்து எதிர்த்து விளையாடினார். ஐதராபாத்தைச்சேர்ந்த சிந்து உலக தரவரிசையில் முன்னனியில் உள்ள சீன வீராங்கனையை 22-20, 21-19 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வாங் வெள்ளி பதக்கம் வென்றவர். அரை இறுதியில் உலக தரவரிசையில் 6ஆம் இடத்தில் உள்ள ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை எதிர்த்து விளையாட உள்ளார் சிந்து.

ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டிகளில் சாய்னா நேவாலுக்குப் பிறகு அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றுள்ளார். கடந்த ஒலிம்பிக் போட்டியில் சாய்னா வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic