சட்டப்பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமலியில் ஈடுபட்டதால் அனைவரும் வெளியேற்றப்பட்டு ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.
"தீயினால் சுட்ட புண் உள்ளாறு, ஆறாதே நாவினால் சுட்ட வடு" என்பது வள்ளுவரின் வரிகள். ஒரு மனிதனை தாக்கினால் வெளியே ஏற்படும் புண்கள் கூட ஆறிவிடும், ஆனால் நாவினால் ஏதாவது ஒரு வார்த்தை கடினமாக வந்து விட்டால் அது ஏற்படுத்தக்கூடிய காயம் ஒரு நாளும் ஆறாது என்பதே இக்குறளின் விளக்கம். கூறிய வார்த்தைகளை ஒருபோதும் திரும்பப்பெற முடியாது என்பதே எதார்த்தம். வேண்டுமானால் கூறிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாமே ஒழிய அதனை திருப்பி எடுக்க முடியாது என்பதே இயற்க்கை.
நமது நாட்டில் சட்டமன்றத்திலும் சரி, நாடாளுமன்றத்திலும் சரி உறுப்பினர்கள் ஏதாவது சொல்லிவிட்டால் அதனனை எதிர்ப்பவர்கள் அவ்வார்த்தையை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என கூச்சல் குழப்பத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்த அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்கிற இந்த பழக்கத்தை யார் ஏற்படுத்தினார்களோ தெரியவில்லை. ஒரு சொல்லை அமைச்சரோ, எம்.எல்.ஏவோ தெரிவித்துவிட்டால் அது உலக முழுவதும் பரவி விடுகிறது. பின்னர் அதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினால் என்ன? நீக்காவிட்டால் என்ன? என்பது நமக்கு புரியவில்லை.
அந்த வகையில் இதே சாரம்சத்தை வைத்து அதிமுக எம்.எல்.ஏ குணசேகரன் மறைமுகமாக ஸ்டாலினை விமர்சித்துள்ளார். இதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென திமுக எம்.எல்.ஏக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட அவர்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து திமுகவின் மூத்த தலைவர்களை அவைக்காவலாளிகள் குண்டுகட்டாக தூக்கி வெளியே விட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒருவாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தனபால் தெரிவித்துள்ளார். இதனை பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. எப்பொழுதுதான் இந்த அரசியல்வாதிகள் திருந்துவார்களோ தெரியவில்லை. அவர்கள் திருந்தாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்கு வாக்களித்த மக்கள் திருந்தினால் மட்டுமே நல்லாட்சி நடைபெறும் என்பது சாமானிய மக்களின் கருத்தாக உள்ளது.

No comments:
Write comments