ஜம்மு கஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மனைவி இனி மேலும் அரசு பங்களாவில் தங்க கூடாது எனவும் உடனே அதனை காலி செய்துவிட்ட வெளியேறிவிடவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மனைவி பாயல். உமர் அப்துல்லா மாநில முதலமைச்சராக இருந்த போது கடந்த 1999ஆம் ஆண்டு அவருக்கு அரசு சார்பில் தங்கிக்கொள்ள பங்களா வழங்கப்பட்டிருந்தது. அன்று முதல் அவரது மனைவி பாயலும் அந்த பங்களாவிலேயே வசித்து வந்தார். கஷ்மீரில் கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து உமர் அப்துல்லா தனது முதலைமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதேபோல் கடந்த சில வருடங்களாக பாயலுக்கும் உமர் அப்துல்லாவிற்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதால் இருவரும் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் பாயல் அதே அரசு பங்களாவில் வசித்து வந்தார். இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பாயல் உடனே அரசு பங்களாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என தீப்ர்பளித்துள்ளது.

No comments:
Write comments